தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களை உருவாக்குங்ககள்- அஸ்மின் அலி

மலேசியாவின் மேம்பாட்டுக்கு உதவ,  உயர் தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்ப்பதற்கு அதிக பயிற்சி பெற்ற ,  திறமையான பணியாளர்கள் தேவை என்று மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ  முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார் .

பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவைப்படும் பகுதிகளில் ஆட்டோமேஷன், தளவாடங்கள், ரசாயன,  கழிவு நீர் சுத்திகரிப்பு,  அச்சிடும் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும் என்று சர்வதேச வர்த்தகத் தொழில்துறை அமைச்சரான அஸ்மின் அலி கூறினார்.

ஆனால், ரோபாட்டிக்ஸ் , ஆட்டோமேஷன் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எங்களுக்கு தேவை என்பதை கோவிட் -19 இலிருந்து நாங்கள் அறிந்து கொண்டதாக அவர் மேலும் கூறினார். மேலும் திறமையான தொழிலாளர் குழுமத்தை உருவாக்கும் முயற்சியில் இதற்கு நிச்சயமாக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அஸ்மிடா தொழில்நுட்பக் கல்லூரியை இங்கு தொடங்கிய பின்னர் அவர் ஓர் ஊடகச் சந்திப்பில் கூறினார்.

அமெரிக்க- சீனா வர்த்தகப் போருக்கு மத்தியில் மலேசியா வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறிப்பாக ஜப்பானிய நிறுவனங்களை ஈர்க்க முடியும் என்று அஸ்மின் என்றார் அவர்.

இந்த முதலீட்டாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை இடமாற்றம் செய்யத் தயாராக உள்ளனர், ஆனால்,  மலேசியாவும்  திறன் பெற்ற பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும்.

நல்ல உள்கட்டமைப்பு,  பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்கள் போன்ற பல விஷயங்களை வழங்க முடியும்.  இதனால் உள்ளூர் பங்கேற்புக்கு அதிக மதிப்பை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மிடா) தொழில் பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய திறன் பயிற்சி மையங்கள்,  தொழில்நுட்ப ,  தொழிற்கல்வி கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளை உருவாக்க  கடுமையாக உழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்ச்சிபெற்ற 1,185 திறமையான தொழிலாளர்கள் தேவைப்படும் 16 துறைகளில் 105 நிறுவனங்கள் அடையாளம் கானப்பட்டுள்ளன  என்று அவர் கூறினார்.

துவக்கத்தில், அஸ்மிதா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க, மலேசிய தானியங்கி, ரோபாட்டிக்ஸ்,  ஐஓடி நிறுவனம்  ஆர்எம் 2 மில்லியனை ஒதுக்கும் என்றும் அஸ்மின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here