நாடாளுமன்ற தேர்வு குழுவில் அன்வார் – அஸ்மின் அலி

நாளை கூட விருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் சில முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்க விருப்பதாக தெரிகிறது.

அதில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோரை நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் புதிதாக இணைக்க தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஸைனுடின், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் ஸாஹிட்
ஹமிடி, பெத்ரா நாடாளுமன்ற உறுப்பினர் ஃபடிலா யுசோப், மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அடி அவாங் ஆகியோரும் அக்குழுவில் இடம் பெற முன்மொழியப்பட்டுள்ளது.

முஹிடின், இஸ்மாயில் சபரி யாக்கோப், வான் அஸிசா வான் இஸ்மாயில், முகமட் சாபு, டேரல் லைகிங், தான் கோக் வாய் ஆகியோருக்கு பதிலாக இவர்கள் அக்குழுவின் உறுப்பினர்களாக தேர்ந்தேடுக்கப்பட விருக்கின்றனர்.

இத்தேர்வு குழு சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விசாரிப்பது, முறையாக கையாள்வது போன்ற பணிகளை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ அரிஃப் முகமட் யுசோப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோருக்கு பதிலாக தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அஸார் ஹருன் சபாநாயகராகவும் முன்னாள் அமைச்சர் அஸாலினா ஒத்மான் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து நாளை விவாதிக்கப்படும் என தெரிகிறது.

நாடாளுமன்றத்திற்கு வரும் பாதையில் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இருக்க வேண்டும் என்பதை ஐஜிபி டான்ஸ்ரீ ஹமிட் பாடோர் உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடின் முதலில் விவாதிப்பார்.

அதை தொடர்ந்து, ஐபிசிஎம்சி, மக்களின் மருந்தகத் தேர்வு, கோவிட் 19 நிலவரம், நாட்டின் பொருளாதார நிலைத் தன்மை போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here