மாடியிலிருந்து விழுந்த ஆசிரியர் மரணம்

பத்து காஜாவில் உள்ள உள்ள தேசிய பள்ளி ஒன்றின் முதல் மாடி பால்கனியில் இருந்து 54 வயதான ஆண் ஆசிரியர் ஒருவர்  விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

மதியம் 12.30 மணியளவில் நாற்காலியில் நின்றுகொண்டிருந்தபோது  விழுந்ததில்   மரணமடந்த்தாக தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர் டி.எஸ்.பி ஜைனுதீன் எம்.டி யூசுப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் வகுப்பறையில் இருந்து அறையின் பின்புறம் உள்ள பால்கனி பகுதியில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் ஏறியபின்,   தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள தானா மேரா போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் ஜைனுத்தீன் கூறினார்.

ஏறக்குறைய 17 ஆண்டுகளாகப் பள்ளியில் கணித ஆசிரியரான இவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று  அவர் கூறினார்.

இவரது மனைவி, வேறொரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு  மனைவியும், ஐந்து குழந்தைகளும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here