முழு பாதுகாப்புடன் காஜாங் தமிழ்ப்பள்ளி திறப்பு

பள்ளிகளில் எஸ்ஓபி எனப்படும் கோவிட்-19 தொற்று தொடர்பிலான விதிமுறைகளை முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு முழு பாதுகாப்புடன் பள்ளி திறக்கப்பட்டது என்று காஜாங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் அ.ஜோன் போஸ்கோ தெரிவித்தார்.

காஜாங் தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு வகுப்பு மாணவர்கள் கற்றல் கற்பித்தலை தொடங்கினார். புதிய அணுகுமுறையில் பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கியது. இதில் ஒவ்வொரு வகுப்பறையின் முன் கிருமிநாசினி திரவியம் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கைகளை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று மாதங்கள் பிறகு பள்ளிகளில் மீண்டும் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பள்ளியில் பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள், ஆசிரியர்களின் தரமிக்க சுகாதாரச் செயல்பாடுகளை கண்காணிக்கப்படும். பள்ளி நிர்வாகம் மட்டுமில்லாது மாணவர்களின் பெற்றோரும் தங்களது பிள்ளைகள் இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கின்றனர்.

இதனிடையே மாணவர்களுக்கான அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் வகையில் வகுப்பறை மற்றும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவுள்ளது.

அடுத்து ஜூலை 22 ஆம் தேதி 1, 2, 3 மற்றும் 4 ஆண்டு மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிலைக்கு தயாராகவுள்ளனர் என்றார். பள்ளயின் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும எஸ்ஓபி விதிமுறை கடைப்பிடிப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் மிகுந்த சுகாதார அடிப்படையில் முழு பாதுகாப்புடன் காஜாங் தமிழ்ப்பள்ளி செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எம். அன்பா
படங்கள் : கு. இராமன் குட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here