மலாக்கா:
நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு சேவையாற்றும் காவல் துறை இயற்கையை நேசித்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் கடற்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும் என மலாக்கா போலீஸ் படையின் துணைத் தலைவர் எஸ்ஏசி நஸ்ரி பின் நவாவி கூறினார்.
கடற்ரையை பாதுகாப்போம், “சுற்றுச் சூழலை நேசிப்போம் , தூய்மையை பேணுவோம்” என்ற கோட்பாட்டை அரச மலேசிய காவல் படை நினைவில் ஏந்தி, நாட்டின் சுதந்திர கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக கிலேபாங் ஷா தங்கும் விடுதி பின் புறத்தில் உள்ள கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்வினை கலந்துக் கொண்டு, நிறைவுச் செய்த போது மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வீரா சைனோல் பின் ஹஜி சமாவின் பிரதி நிதியாக கலந்துக் கொண்ட அவரது உரையை பகிர்ந்துக் கொண்டார்.

தூய்மை பேணுவதும் இயற்கைக்கு சிதைவு ஏற்பாட வண்ணம் அதனைப் பாதுகாப்பதும் நமது கடமையாகும். ஒவ்வொருவரும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்த்தும் இயற்கையை மாசுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மலாக்கா மாவட்ட காவல் துறை மற்றும் மலாக்கா லயன்ஸ் கிலாப் ஏற்பாட்டிலும் ஷா பிஜ் தங்கும் விடுதியின் இணை ஆதரவிலும் நடைபெற்ற துப்பரவு பணியில் 150 பேர் திரளாக கலந்துக் கொண்டனர். நிகழ்வு காலை 8.30 மணிக்கு தொடங்கியது .

பந்தாய் குண்டோர் சட்ட மன்ற உறுப்பினர் துமினா காடி முகமட் ஹசிம், மலாக்கா மாவட்ட காவல் துறை தலைவர் கிரிஸ்டோபர் பதிட், மலாக்கா மாநில வணிக குற்றவியல் புலணாய்வு துறைத் தலைவர் சுப்ரிண்டென்டன்ட் ஏ. சுந்தர ராஜன் , மலாக்கா மாவட்ட மக்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு குற்றவியல் தடுப்பு தலைவர் டிஎஸ்பி வி. குணசேகரன், ஷா பீச் தங்கும் விடுதி தலைமை இயக்குனர் டேனிஸ் ஸ்டேம்பர்ட் , மலாக்கா மாவட்ட லையன்ஸ் கிலாப் தலைவர் மைக் கான் , காவல் துறையினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
(News by our reporter R.Malini)























