கள்ளக்குடியேறிகள் தடுத்து வைப்பு

கலாபாகான் பகுதியின் கே.எம் 21 ஜாலான் கலாபாகான்-கெனிங்காவில், மேற்கொள்ளப்பட்ட ‘ஒப் பெந்தெங்’ சோதனையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 11 சட்டவிரோத குடியேறியவர்களையும் இரண்டு உள்ளூர் ஆட்களையும் பொது நடவடிக்கைப் படை (GOF) தடுத்து வைத்தது.

ஐந்து முதல் 52 வயது வரையிலான சட்டவிரோத குடியேறியவர்கள், சாலைத் தடுப்புச் சோதனையில் நிறுத்தப்பட்டபோது போதிய  பயண ஆவணங்களைக் காட்டத் தவறிவிட்டதாக GOF 14 ஆவது படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி சூப்பிரண்டெண்டன் மொஹமட் யாக்கோப் முராட் தெரிவித்தார்.

இரண்டு உள்ளூர் மனிதர்களும் தாங்கள் குடியேறியவர்களை  பள்ளி பஸ்ஸை ஒன்றைப் பயன்படுத்தி மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாகக் கூறியாதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் அருகிலுள்ள எண்ணெய்ப் பனை தோட்டத்தில் வேலை செய்வதாகவும் மொஹட் யாப்கோப் கூறினார்.

கைதிகள் அனைவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக தவாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு (ஐபிடி) கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜாலான் கலாபாகனில் ஒரு பெட்ரோனாஸ் நிலைய  அருகே மேற்கொண்ட  நடவடிக்கையின் போது 10 வயது சிறுமி உட்பட 13 சட்டவிரோத குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர் என்று ஜிஓஎஃப்  கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here