கத்தோலிக்க கல்லறைகளில் சூரையாடல்

புதைக்கப்பட்ட இடத்தில் மதிப்புமிக்க பொருட்களைச் சூரையாடும் கும்பல் ஒன்று ரியாமில் உள்ள ரோமன் கத்தோலிக்க கல்லறையில் குறைந்தது ஐந்து கல்லறைகளைச் சேதப்படுதியுள்ளனர்.

பாரிஷ் கவுன்சில் உறுப்பினரரான ஸ்டீபன் ஓங், இச்சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் கல்லறைக்கு விரைந்ததாகக் கூறினார்.

திருச்சபைக்கான கல்லறையில் கான்கிரீட் பணிகளுக்குப் பொறுப்பான சில ஒப்பந்தக்காரர்கள், கல்லறைகள் பாழ்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர், அவர்கள் உடனடியாக இது குறித்து தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

கல்லறையில் இது மூன்றாவது சம்பவமாகும். முந்தைய ஆண்டு மே மாதத்திலும், கடந்த ஆண்டு தொடக்கத்திலும் கல்லறைகள் தகர்க்கப்பட்டிருக்கின்றன என்று கல்லறையில் சந்தித்தபோது  நிருபர்களிடம் அவர் கூறினார்.

கல்லறையைச் சுற்றிப் பார்த்தபோது, ​​மூன்று கான்கிரீட், ஐந்து ஓடுகட்டப்பட்ட கல்லறைகள் திருடர்களால் தகர்க்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  ஒரு சுத்தியலைக்கொண்டு  கல்லறைகள் தகர்க்கப்பட்டிருப்பதாகக்கூறிய அவர், சுத்தியலையும் காட்டினார்.

சமீபத்திய சம்பவங்களில் சிலர் கைது செய்யப்பட்ட போதிலும் மிரியில் பல கல்லறைகள்  சூரையாடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாழ்படுத்தப்பட்ட கல்லறைகளில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்பது  இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார் அவர்.

கடந்த வாரம் தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்தில் தங்கள் பெயர்களை அறிவிப்பதன் மூலம் இறந்தவர்களின் குடும்பங்கள் கல்லறைகளை அடையாளம் காணுமாறு தேவாலய உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

சில குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், கல்லறையில் அவர்களில் சிலரை அறியமுடியவில்லை. சுமார் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவரின் பெயர்கள் அடையாளம் காணமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்தவர்கள் எந்த இழப்பையும் குறிப்பிடவில்லை. மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க  கல்லறைப்பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here