இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 11.5 லட்சத்தை தாண்டியது: கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கு வங்காளம், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 30 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முதன்முறையாக 40 ஆயிரத்தை தாண்டியது.
இன்று சற்று குறைந்து 37,148 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 11,55,191 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 28,084 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,24,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,02,529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,18,695 பேரும், தமிழகத்தில் 1,75,678 பேரும், டெல்லியில் 1,23,747 பேரும், கர்நாடகாவில் 67,420 பேரும், உத்தர பிரதேசத்தில் 51,160 பேரும், மேற்கு வங்காளத்தில் 44,769 பேரும், குஜராத்தில் 49,353 பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here