அமெரிக்காவில் 99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி, விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்தார். இவர் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார்.

அப்போது அவர் விமானத்தை இயக்கியும் காட்டி உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான விமான பயிற்றுவிப்பாளராகவும், விமானியாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது கின்னஸ் சாதனையாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த 98 வயதான ஆண்தான் உலகின் வயதான விமான பயிற்றுவிப்பாளர், விமானி என்ற சாதனையை வைத்திருந்தார்.அந்த சாதனையை இப்போது ரோபினா ஆஸ்தி முறியடித்துள்ளார். அவரை அவரது மாணவர்கள் பாராட்டினர்.

பிராண்டன் மார்டினி என்ற மாணவர் இதுபற்றி கூறுகையில், “1000 மணி நேரத்தில் நான் கற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை ரோபினா ஆஸ்தி எனக்கு கற்று தந்துள்ளார்” என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here