இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 600 மில்லியனை கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராம் செயலியில் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 600 மில்லியனை(60 கோடி) கடந்துள்ளது. இதன் மூலம் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொனால்டோவிற்கு அடுத்ததாக அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்சி, 2-ஆவது இடத்திலும் (482 மில்லியன்), அமெரிக்க பாடகி செலீனா கோமெஸ் (427 மில்லியன்) 3-ம் இடத்திலும் உள்ளனர்.








