நாம் செய்யும் இந்த தவறுகள் வீட்டில் பணம் சேருவதை தடுக்கும்

ஒவ்வொரு வீடுகளில் எச்சில் பாத்திரம் சேர சேர உடனே கழுவிக் கொண்டே இருப்பார்கள். அதை அப்படியே போட்டு வைக்க மாட்டார்கள். அவர்களிடம் செல்வம் அதிகமாக சேரும். எச்சில் பாத்திரத்தை அப்படியே போட்டு வைப்பவர்களிடம் நிச்சயம் செல்வம் சேர வாய்ப்பில்லை. எந்த விஷயத்தையும் நேர்மறையான எண்ணங்களுடன் அணுகுபவர்கள் எப்போதும் செல்வவளம் கொண்டு இருப்பர். வார்த்தைகளில் இல்லை, வேண்டாம், வராது போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. மங்களப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லக்கூடாது. யாசகம் கேட்பவர்களிடம் இல்லை என்ற வார்த்தை செல்லக்கூடாது. அதற்கு பதிலாக வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்தி நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்களிடம் செல்வம் சேராது என்பார்கள்.

ஒரு வீட்டில் இருளானது எப்போதும் நிலவக் கூடாது. சிறு வெளிச்சமாவது எப்போதும் இருப்பது அவசியம். வெளிச்சமின்றி இருள் சூழ்ந்த சூழ்நிலையில் வீடானது இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம், பணவரவு நிச்சயம் தடைபடும் என்கிறது சாஸ்திரம். அதனால் ஒரு சிறு மின் விளக்கை ஆவது எப்போதும் எரியும் படி வீட்டில் அமைத்துக் கொள்வது செல்வவளம் பெருகுவதற்கு வழிவகுக்கும். அது போல் ஒரு வீட்டில் அன்னபூரணியை அவமதிப்பு செய்பவர்களுக்கு செல்வத்தை தடுக்கும் சாபம் உண்டாகும். வீட்டில் சமையலறையில் எந்த பொருள் தீர்வதற்கு முன்பும் அவற்றை வாங்கி சேகரித்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அரிசி, உப்பு, பால், சர்க்கரை இந்த நான்கு பொருட்கள் தீரும் வரை வாங்காமல் இருப்பது செல்வ வளத்தை தடுக்கும். உங்களிடம் பணம் வரவு நிச்சயம் தடைபடும்.

கால்வாசி இருக்கும் பொழுதே கடைகளிலிருந்து வாங்கி தேக்கம் செய்து கொள்வது மகாலட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோல் ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணினால் உங்கள் வீட்டிலும் செல்வம், பணம் போன்றவை தாராளமாக தடையின்றி வந்து கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here