டாப்சி யாருக்கு ஐபோன் வாங்கி கொடுத்தார்?

தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா–2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் நடிகை டாப்சி, ஆன்லைன் வகுப்புக்காக போன் இல்லாமல் தவித்த ஏழை மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், 12ம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும், அவர் நீட் தேர்விற்கு படிக்க தயாராகி வருகிறார். அதற்கான கல்வி கட்டணத்தை அவரது தந்தை கடன் வாங்கியும், நகைகளையும் விற்றும் கட்டியுள்ளார். இருப்பினும் அந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் படிக்க தேவையான ஸ்மார்ட்போன் இல்லை என்று செய்திகள் வெளியானது. இதை பார்த்த நடிகை டாப்சி அந்த மாணவிக்கு புதிய ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் டாப்சி.
இதுகுறித்து டாப்சி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண்கள் அதிகம் படிக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். நமக்கு அதிக டாக்டர்கள் அவசியம். அதற்காக இது என்னுடைய ஒரு சிறு முயற்சி என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here