நடிகர் கவின் வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்க இருப்பதாகத் தகவல்.
எதிர்வரும் 20ஆம் தேதி அவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது என்றும் இது பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது.
‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவின், அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லாஸ்லியாவைக் காதலிப்பதாகக் கூறப்பட்டது. எனினும் அந்தக் காதல் வளரவில்லை.
தற்போது இரண்டு தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் கவின். லாஸ்லியாவும் நாயகியாக நடித்து வருகிறார்.
கவின் நடித்த ‘லிப்ட்’, ‘டாடா’ ஆகிய படங்கள் வசூல் ரீதியில் வெற்றிபெற்றுள்ளன.
இந்நிலையில், கவினை மணக்க உள்ள பெண் யார், திருமணம் நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















