கடலடி சுரங்கபாதை திட்டம் தொடர்பில் லிம் குவான் கைது

புத்ராஜெயா: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்  நாளை கோலாலம்பூர்  உயர் நீதிமன்றத்தில்  (ஆக. 7) அவர் மீது குற்றம் சாட்டப்படும்.

முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மீது குற்றம் சாட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) அட்டனரி ஜெனரல் (ஏஜி)யிடம் இருந்து உத்தரவு பெறப்பட்டதாக  எம்.ஏ.சி.சி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகுதியில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 (அ) (ஏ) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று MACC கூறியது.

சர்ச்சைக்குரிய பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டம் புதிய தடங்களைத் தொடர்ந்து மீண்டும் ஆராயப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஒட்டு புலனாய்வாளர்கள் அதிகமானோரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் தற்போதைய பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ் மற்றும் மாநில நிர்வாக கவுன்சிலர்கள் ஜகதீப் சிங் தியோ, சோங் எங், மற்றும் பீ பூன் போ ஆகியோர் அடங்குவர்.

பினாங்கில் உள்ள கொம்தாரில் உள்ள மாநில பொதுப்பணித்துறை, பயன்பாடுகள் மற்றும் வெள்ளத்தைக் குறைக்கும் குழுவின் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி மற்றும் துணை முதல்வர் பேராசிரியர்  ராமசாமி ஆகியோரின்  அலுவலகங்களையும் எம்.ஏ.சி.சி பார்வையிட்டுள்ளது.

லிம் 2008 முதல் 2018 வரை பினாங்கு முதல்வராக பணியாற்றினார்.

 

எம்.ஏ.சி.சி சட்டம் 2009 இன் பிரிவு 23 ன் கீழ் ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பினாங்கு அமர்வு நீதிமன்றத்திலும் அவர் மீது குற்றம் சாட்டப்படும்.

சர்ச்சைக்குரிய RM6.3 பில் பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டத்தின் மீது பணமோசடி வழக்கு  அடுத்த திங்கட்கிழமை சுமத்தப்படும் என்றும், ஆகஸ்ட் 11ஆம் தேதி மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்  என்றும் MACC கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here