உ.பி.யில் சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை 2 பேர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமியின் தொண்டை மற்றும் கண்ணில் காயம் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகி உள்ளதாகவும், அவளது தொண்டை, கண்களில் காயம் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உ.பி.யில் ஆளும் பா.ஜ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறுமியின் கொலை சான்றாக உள்ளது என காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here