தமிழ் நடிகையின் இடுப்பில் கைவைத்தாரா பாஜக முதல்வர்?

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் தமிழ் நடிகை ஒருவரின் இடுப்பில் கைவைத்ததாக வைரலாகி வரும் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா என்பது தெரிந்ததே. இவர் நேற்று மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவிரி நீர் திறப்பு விழாவில் கலந்து கொண்டார், இந்த விழாவில் மாண்டியா தொகுதி எம்பி என்ற வகையில் நடிகை சுமலதாவும் கலந்து கொண்டார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் காவிரி நீர் திறப்பு விழாவில் முதல்வர் எடியூரப்பா மற்றும் சுமலதா எம்பி ஆகியோர் பூக்களை தூவினார்கள். அப்போது முதல்வர் எடியூரப்பா சுமலதாவின் இடுப்பில் கை வைத்தது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த சுமலதா உடனே கோபத்தில் முதல்வரிடம் பேசுவது போன்றும் உடனே முதல்வர் எடியூரப்பா இடுப்பில் இருந்து கை எடுப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.

ஆனால் உண்மையில் சுமலதா கோபத்தில் பேசினாரா என்பது தெரியவில்லை. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பாஜக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சுமலதா மறைந்த கன்னட நடிகர் அம்ரிஷின் மனைவி என்பதும் மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்பியாக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here