பெண்ணிடம் வழிப்பறி – போலீஸ் அதிகாரி கைது

சீனா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரிடம் வழிப்பறி செய்த குற்றத்திற்காக கார்ப்பரல் பதவி வகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று அம்பாங் மாவட்ட காவல் துறை துணை தலைவர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

29 வயது நிரம்பிய அந்த பெண் நேற்று இரவு 7 மணியளவில் இங்குள்ள அம்பாங் ஜாலான் பெர்டாணாவில் ஒர் கடையில் நண்பருடன் இருந்துள்ளார்.

திடிரென அந்த பெண்ணின் அருகில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று அடையாளப் படுத்திக் கொண்டு அப்பெண்ணின் இரு கைகளையும் பிடித்து கார் நிறுத்தும் இடத்திற்குச் இழுத்துச் சென்றுள்ளனர்.

அப்பெண் தன்னை காப்பாற்றுமாறு கத்தியதை தொடர்ந்து அங்குள்ளவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். அதோடு 46 வயது நிரம்பிய அந்த போலீஸ் அதிகாரியை அங்குள்ள மக்கள் வலைத்து பிடித்துள்ளனர். இருந்தும் மற்ற இருவர் அங்கிருந்து ஓடி விட்டதாக அவர் கூறினார்.

அதோடு கைது செய்யப்பட்டவர் உண்மையாக கார்ப்பரல் பதவி வகிக்கும் அதிகாரி தான். அவருக்கு ஏற்கெனவே வேலை பிரச்சினையாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் 5 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார். மேலும் அவருடைய சில பொருட்களும் காணவில்லை. ஆனால் அவருக்கு காயங்கள் எதும் ஏற்படவில்லை.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைப் பற்றி தகவல் கிடைத்துள்ளன. அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மேல் விசாரணைக்காக ஆகஸ்டு 30ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மூன்று ஆடவர்கள் அப்பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்துச் செல்லும் காணொளி சமூக வலைத்தலங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here