யுகங்களைக் கடந்தவர் விநாயகர்

ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே விநாயகர் வழிபாடு காணப்படுவதாக சான்றுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் விநாயகர், நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்வதாக புராணங்கள் சொல்கின்றன.

அதன்படி கிருதாயுகத்தில் காசிபர் -அதிதி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோடு விளையாடுவதில் நாட்டம் கொண்டவராகவும் (மயுரேசர்), துவாபரயுகத்தில் பரராச முனிவர்- வத்ஸலா தம்பதியினரின் வளர்ப்பு குமாரராகவும் (விக்னராசர்), கலியுகத்தில் சிவன் – பார்வதிதேவியின் மகனாகவும் (விநாயகர்) அவரது பிறப்பு நீண்டுகொண்டே வந்துள்ளது.

யுகங்களைக் கடந்தவர் என்பதால், காலந்தோறும் அவரை வழிபடுவது பின்பற்றப்பட்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் ஒரு கூட்டத்தினர் கணபதியை மட்டுமே வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அத்தகைய வழிபாட்டை ‘காணாபாத்யம்’ என்று குறிப்பிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here