மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமலில் இருக்கும் போது அதனை மீறி செயல்பட்ட 22 பேரை கோலாலம்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இங்குள்ள கெப்போங் மஞ்சலாரா வட்டாரத்தில் உடம்பு பிடி மற்றும் இரவு கேளிக்கை மையத்தில் புக்கிட் அமான் டி7 பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த இரு மையங்களில் மொத்தம் 69 வாடிக்கையாளர்களுக்கு கம்பாவுன்ட் விதிக்கப்பட்டது.
புக்கிட் அமான் டி7 பிரிவின் துணை இயக்குனர் முகமட் ஸானி செ டின் தலைமையில் நடைபெற்ற இச்சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 9 பேரும் அந்நிய பிரஜைகள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இந்த இரு மையங்களின் பாதுகாவலர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குடிநுழைவு பிரிவு மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல் என இரு பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவர்.