கோத்தா திங்கி:
செனாய் தேசாரு விரைவுச்சாலையில் (SDE) பெனாவார் நோக்கிய திசையின் 50.1வது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
முதல் வாகனம் மற்றொரு காரை முந்திச் செல்லத் முயன்றதால் விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் அறியமுடிகிறது என்று பெனாவார் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி இஸ்வானி அப்த் ஹமீத் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 2) மதியம் 1.43 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றார் அவர்.
“முதல் வாகனத்தில் இருந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர், மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.









