பொது இடத்தில் நிர்வாணமாக நின்ற பெண் கைது!

பொது இடத்தில் தன்னை தானே நிர்வாண வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷின் பிரபலமான லட்சுமஞ்சூலாவில் கங்கை நதியில் நிர்வாண வீடியோ எடுக்கப்பட்டதாக 27 வயதான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

உள்ளூர் வார்டு கவுன்சிலர் கஜேந்திர சஜ்வான் ஆகஸ்ட் 25 ம் தேதி அந்தப் பெண் மீது புகார் அளித்ததை அடுத்து அந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மூத்த துணை ஆய்வாளர் ஆர்.கே.சைனி கூறுகையில், அந்த பெண் நிர்வாண வீடியோ ஷூட் மற்றும் போட்டோ ஷூட் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

சமூக ஊடகம் மூலம் இதை அறிந்த கவுன்சிலர் சஜ்வான் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, இந்த செயல் பொது இடமான லட்சுமஞ்சூலாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், சில உள்ளூர்வாசிகள் அந்த பெண் ரிஷிகேஷில் உள்ள ஒரு ஹோட்டலில் வசித்து வருவதாகக் கூறினர்.

அவரது முகவரியைச் சரிபார்த்த பின்னர், பொலிசார் அவரது ஹோட்டலுக்குச் சென்று சம்பவம் குறித்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையின் போது, வீடியோவை நிர்வாணமாக படம்பிடித்ததை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் இது இந்தியாவில் சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியாது என்று கூறினார்.

வீடியோ மற்றும் ஃபோட்டோஷூட் தனது மணி-நெக்லஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் அவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார், .இருப்பினும், பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று சைனி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here