ஜப்பானின் அடுத்த பிரதமர்?: செப்.14-ல் முடிவு

உடல் நலக்குறைவு காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஷின்சோ அபே முடிவு செய்துள்ளதால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபெ, உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுள்ளார்.

அரசியல் மற்றும் நிர்வாக பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான, ‘லிபரல்’ ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள், வரும், 14ல் கூடி, அடுத்த பிரதமரை தேர்வு செய்யஉள்ளனர்.

பிரதமர் ஷின்சோ அபேயின் வலதுகரமாகவும், அரசு செய்தி தொடர்பாளராகவும் இருக்கும், யோஷிடி சுகா, 71, அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக, ஜப்பான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபே தலைமையிலான அரசு சுமுகமாக இயங்குவதன் பின்னணியில், சுகா உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர் தவிர, 2012 – 17 வரை, ஜப்பான் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த புமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ அமைச்சர் சிஜேரு இஷிபா ஆகியோரும், பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here