துபையில் ‘ஓய்வு விசா’ அறிமுகம்

துபையில் முதல்முறையாக 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு விசா என்ற புதிய நுழைவு இசைவுத் திட்டத்தை புதன்கிழமை பிரதமர் ஷேக் முகமது அறிவித்தார்.

‘துபையில் ஓய்வு பெறுதல்’ என்ற திட்டத்தின் கீழ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் துபையில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இந்த நுழைவு இசைவிற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் வலைத்தளம் (retireindubai.com) மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த நுழைவு இசைவைப் பெறுவதற்கு நிபந்தனைகளாக, ஓய்வு பெற்ற பின் மாதந்தோறும் ரூ.4 லட்சம் வருமானம் முதலீடுகள் அல்லது ஓய்வூதியம் மூலம் பெறவேண்டும் அல்லது துபையில் 4 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here