தொழிலதிபர் தீயில் கருகி பலியானது எப்படி?

நள்ளிரவில் சேலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சிக்கினர். இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் தனது குடும்பத்தோடு கருகி உயிரிழந்துள்ளார். தீ விபத்து நிகழ்ந்தது எப்படி என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் மர அறுவை ஆலை உரிமையாளர் கார்த்திக் கடந்த ஆண்டு ஆசை ஆசையாக பார்த்து கட்டிய புது வீட்டில் சமீபத்தில் குடியேறினார். அவரது குடும்பத்தினருடன் உறவினர்களும் அந்த வீட்டில் குடியிருந்தனர். நேற்றிரவு அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென தீ பற்றியது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறின.

புதிய வீடு தீ பற்றி எரிவதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல கொடுத்தனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், வீட்டிற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க போராடினர். எனினும், வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த கார்த்திக் அவருடைய மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அன்பழகன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாடியில் உறங்கிக் கொண்டிருந்த அன்பழகனின் பெற்றோர் மற்றும் மகள் சௌமியா ஆகியோரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். அவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. அவர்களால் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லை.

இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக நடந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் தீ விபத்து எப்படி நேர்ந்தது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. நள்ளிரவில் என்ன நடந்தது எதனால் தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. தீ விபத்தில் இருந்து தப்பியர்களுக்கும் எதுவும் தெரியவில்லை

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்‍களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here