நாணயங்கள் நிறைந்த குடம்

உத்தரபிரதேசத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்கள் 1862ஐ சேர்ந்த வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்கள் நிறைந்த குடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை ஒரு கட்டிடத்திற்கான அடித்தளத்தைத் தோண்டும்போது 17 வெள்ளி மற்றும் 287 வெண்கல நாணயங்கள் அடங்கிய குடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கன்ஹாவ் கிராமத்திற்கு நெருக்கமான டவுண்டியா கெடா என்ற இடத்தில் அக்டோபர் 2013ஆம் ஆண்டு ஒரு பெரிய புதையலைக் கண்டுபிடித்தனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடத்தைக் கண்டுபிடித்தவுடன் அவர்களிடையே சண்டை ஏற்பட்டதாகவும், சிலர் நாணயங்களை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நாணயங்கள் 1862ஆம் ஆண்டை சேர்ந்தவை. தொழிலாளர்களிடமிருந்து சில நாணயங்களை போலீஸார் மீட்டுள்ளனர். அவற்றை சஃபியூர் கருவூலத்தில் டெபாசிட் செய்துள்ளதாக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் எஸ்.டி.எம் ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார். மேலும் தொழிலாளர்களிடம் நாணயங்கள் இருக்கக்கூடும், அவை விரைவில் மீட்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here