சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

தமிழகத்தில் இயக்கப்படவுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை இடையிலும் ரயில்கள் இயக்கம் செய்யப்படுகிறது. மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு ரயிலில் மக்கள் பயணிக்க இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here