உணவகங்களில் ஏசி பயன்படுத்தலாம்

இன்று முதல் உணவகங்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து, பார்சல்கள் மட்டுமே வாங்க அரசு அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது.

ஆனால், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் காலை 6 முதல் இரவு 8 மணி வரை உணவகங்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால், உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here