ரஷ்யா சென்ற ராஜ்நாத் சிங் ஈரான் வந்தடைந்தார்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை மாலை ஈரான் தலைநகர் டெஹ்ரான் வந்தடைந்தார்.மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். மாநாட்டில் சீன, ரஷ்ய, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.சீன பாதுகாப்பு அமைச்சருடன் பேசிய ராஜ்நாத் சிங், ‘எல்லையில் படைகளை வாபஸ் பெற வேண்டும். சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா தன் இறையாண்மையை விட்டுக்கொடுக்காது’ என்று கண்டிப்புடன் கூறினார்.ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்டு ஈரான் வந்துள்ள ராஜ்நாத் சிங் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்தித்து பேச உள்ளார். சந்திப்பின் போது இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பெர்சியன் வளைகுடா நாடுகள் நிலைமை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here