காணாமல்போன 5 இந்தியர்கள் எங்களிடம்தான் உள்ளார்கள்

காணாமல்போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதை சீனா உறுதிபடுத்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல்போன அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் தங்கள் எல்லைக்குள் இருப்பதாக சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் உறுதிப்படுத்தியதாக மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

“இந்திய இராணுவம் அனுப்பிய ஹாட்லைன் செய்திக்கு சீனாவின் பி.எல்.ஏ. பதிலளித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளைஞர்கள் தங்கள் பக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று ரிஜிஜு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர்களை திரும்ப ஒப்படைப்பதற்கான பணிகளை பி.எல்.ஏ. மேற்கொண்டு வருவதாகவும் ரிஜிஜு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here