கொரோனா தடுப்பூசி 2ம் கட்ட சோதனை தற்காலிக நிறுத்தம்

‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் 2ம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் தடுப்பூசி தயாரிப்பை ரஷ்யா தொடங்கியது. மேலும் இந்தியா, சீனா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா தடுப்பூசி குறித்த இறுதிக் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.கடந்த மாத இறுதியில் முதற்கட்ட பரிசோதனை வெற்றிக்கரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்புமருந்து செலுத்தப் பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here