ஆந்திராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் தரிசனத்திற்கு ஆன்லைனில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில், புரட்டாசி மாத வழிபாட்டிற்கு தமிழகத்தில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் புரட்டாசி வழிபாட்டிற்கு தமிழகத்தில் இருந்து பக்தர்கள் வரக்கூடும் என்பதால் தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், புரட்டாசி மாதத்தில் பாத யாத்திரையாகவோ, வேறு பயண வடிவிலோ திருப்பதிக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 18 வரையிலான கால கட்டத்தில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா சூழல் சரியான உடன் திருப்பதிக்கு வருமாறும் தமிழக பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.