மலேசிய ஆகாயப்படையின் முன்னாள் தளபதியை சந்தித்தார் பேரரசர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று ஆகாயப்படையின் முன்னாள் தளபதியான ஜெனரல் (பி) டான்ஸ்ரீ அஸ்க்கார் கான் கோரிமான் கானை சந்தித்தான்.

இந்த சந்திப்பு இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது. டான்ஸ்ரீ அஸ்க்கார் கான் இவ்வாண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றது.

டான்ஸ்ரீ அஸ்க்கார் கான் தமது புதிய பயணத்தில் சிறக்க மாமன்னர் அவர்கள் வாழ்த்தினார்.  இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் மாமன்னரின் அதிகாரப்பூர்வ சமூக தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

முன்னதாக ஜூலை மாதம் டான்ஸ்ரீ அஸ்க்கார் கான் பணி ஓய்வு பெற்றதை அடுத்து ஜெனரல் டத்தோஸ்ரீ முகமட் நோரஸ்லான் தற்போது அப்பதவியை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here