கட்டணச் சலுகைகளை வாரிவழங்கும் சென்னை மெட்ரோ ரயில்

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னையில் 7ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

கொரோனா காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்தது. இந்தநிலையில், அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் பயண சீட்டுகளில் (வரம்பற்ற பயண அட்டை மற்றும் பலவழி பயண அட்டை தவிர) 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here