பொதுவாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பிளாக்கில் டிக்கெட் விற்பதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கும் ஆனால் தமிழ் நடிகர் ஒருவர் தான் நடித்த திரைப்படத்தின் பிளாக் டிக்கெட்டுக்களை தானே விற்ற சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சென்ராயன், தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அந்த படத்தில் நடிக்கும் போதுதான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் 200 டிக்கெட்டுகளை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாங்கியதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் படம் ரிலீசாகும் தேதியன்று தனது ஓனர் திடீரென ஆந்திரா சென்று விட்டதாகவும் எனவே அந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் என்னிடம் கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்த்துக் கொள் என்று கூறியதாகவும் சென்றாயன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இதனை அடுத்து காசி தியேட்டருக்கு தனது நண்பர்களுடன் சென்ற சென்றாயன் தனக்கும் தனது நண்பர்களுக்கும் போக மீதி இருக்கும் டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்றதாகவும், அவரிடம் பல ரசிகர்கள் டிக்கெட் வாங்கியதாகவும் கூறினார். ஒரு படத்தில் நடித்த நடிகரே அந்த படத்தின் டிக்கெட்களை பிளாக்கில் விற்றது தான் ஒருவனே என்ற பெருமை தனக்கு உண்டு என்றும் சென்ராயன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.