முன்னணி நடிகையாக 1960 மற்றும் 70களில் தமிழ்,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை காஞ்சனா. இப்போது இவருக்கு 79 வயது ஆகிறது.
பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் கதாநாயகனின் பாட்டியாக தலை காட்டினார். இவர் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் சினிமா வாழ்க்கையில் நினைவுகளை குறித்தும் பகிர்ந்துள்ளார் .
அதில் அவர் தன் விமான பணிப்பெண்ணாக இருந்த பொழுது இயக்குனர் ஸ்ரீதர் அவரை ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைத்ததாக கூறினார். அவருடைய உண்மையான பெயர் வசுந்தராதேவி என்றும் நடிகை வைஜயந்திமாலா வின் தாயாரும் அதே பெயரில் நடித்துக் கொண்டிருந்ததால் இயக்குனர் தனக்கு காஞ்சனா என பெயர் மாற்றினார் என்றும் கூறினார்.
1964 ஆம் ஆண்டு அந்த படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு. கன்னடம் ஆகிய பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. 46 ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்த பணத்தில் சென்னையில் பல சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்ததாகவும் அதனை உறவினர்கள் ஏமாற்றி பறித்ததாகவும் கூறினார்.
மேலும் அவற்றிற்காக கோர்ட்டில் கேஸ் போட்டதாகவும் சொத்துக்கள் கையில் கிடைத்தால் அதனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு எழுதி வைப்பதாக வேண்டியதாகவும் கூறினார். சொத்துக்கள் மீண்டும் கிடைத்ததால் வேண்டிய வண்ணமே வேண்டுதலை நிறைவேற்றியதாக கூறினார்.தற்போது தனது தங்கையுடன் வசிப்பதாகவும் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அப்பத்திரிக்கை நிறுவனத்தில் நிறுவனத்துடன் பகிர்ந்துள்ளார் நடிகை காஞ்சனா.