பிரதமர் மோடியின் பாராட்டு: அதிபர் டிரம்ப் பெருமிதம்

“அமெரிக்காவில், அதிக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதற்கு, இந்திய பிரதமர் மோடி, என்னை தொலை பேசியில் அழைத்து பாராட்டினார்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 65 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.வைரஸ் பரவலை தடுக்க, பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. எனினும், நாட்டில், வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக, டிரம்ப் நிர்வாகத்தை, ஜனநாயக கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

கொரோனா வைரசால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகள், அதிபர் டிரம்பிற்கு, வரும் அதிபர் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.ஆனாலும், இந்த குற்றச்சாட்டுகளை முறியடித்து, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நெவாடா மாகாணத்தில்,நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: உலகிலேயே, கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகள், அமெரிக்காவில் தான் அதிகமாக செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவை விட நாம், 4.4 கோடி பரிசோதனைகள் அதிகமாக செய்துள்ளோம்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, என்னை தொலைபேசியில் அழைத்து, அதிக பரிசோதனைகள் செய்து உள்ளதற்கு பாராட்டுகளை முன்னர் தெரிவித்தார். இவ்வாறு, அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here