அமெரிக்காவை தாக்கினால் 1000 மடங்கு திரும்ப பதிலடி

அமெரிக்காவை ஈரான் தாக்கினால் அதன் மீது 1000 மடங்கு தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் முக்கிய தளபதி காசிம் சுலைமானியை பாக்தாத்தில் வைத்து அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதன் ஒரு கட்டமாக, நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதர் லானா மார்க்ஸ்-ஐ கொல்ல ஈரான் சதிவேலை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் ஈரானுக்கான எச்சரிக்கையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here