பிக் பாஸில் இணையப்போகும் பிரபல ஆண் அழகன்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ ரியோராஜ், சனம் செட்டி கலந்து கொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி என்று செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு தமிழ் நடிகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

ரியோவுக்கு போட்டியாக R.K சுரேஷ் நடித்த ‘டைசன்’ என்ற படத்தில் வில்லனாக வரும் பிரபல மாடல் பாலாஜி முருகதாஸ் என்பவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் செய்தி வெளியாகியுள்ளது. ‘பிகில்’ நடிகை அம்ரிதா ஐயரும் கலந்து கொள்ளவிருப்பதும் கிட்டத்தட்ட உறுதிதான்.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here