முகக் கவசம் அணியவில்லையா? -நூதன தண்டனை

கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் தண்டனையாக கல்லறைகளை தோண்டவேண்டும் என்று இந்தோனேஷியாவில் நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

இந்தோனேஷிய நாட்டின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்கள் தண்டனையாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ” கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது மூன்று பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முகக்கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று செர்ம் மாவட்டத் தலைவர் சுயோனோ கூறினார்.

கொரோனா காலத்தில் முகக்கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

ஜாவா நகரில் அமல்படுத்தப்படும் நூதனமான இந்த தண்டனை மக்கள் மத்தியில் முகக்கவசம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியுள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here