ஆன்லைன் பர்சேஸ்: மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடி மிச்சம்!

மத்திய அரசு ஆன்லைன் மூலம் 40 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பொருட்கள் கொள்முதல் செய்ததில், 100 கோடி டாலர் (ரூ.7,500 கோடி) மிச்சமாகியுள்ளதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இ-சந்தை இணைய சேவை பெரும்பாலும் அமேசான்.காம் மூலம் பொருட்களை வாங்கியுள்ளது.

அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர், கார், நாற்காலி போன்ற பொருட்களை குறைந்த விலையில் இணையதளம் மூலம் வாங்கியதால் அரசுக்கு பெருமளவு தொகை மிச்சமாகி உள்ளது. இந்த இணையதளத்தில் ஹிந்துஸ்தான் யுனி லீவர், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் இணையதள சந்தை தலைமை செயல் அதிகாரி தல்லீன் குமார் தெரிவித்துள்ளதாவது: இந்தியா தனது ஜி.டி.பி.,யில் 18 சதவீத அளவுக்கு பொருட்களை வாங்க செலவிடுகிறது. இதில் கால் பங்கு இணையதளம் மூலம் வாங்கப்படுகிறது. பிற கொள்முதல் மிகவும் முக்கியமான ராணுவ தளவாடங்கள் மற்றும் விமானங்கள் வாங்குவதற்கானது.

தற்போது 350 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் இணையதளம் மூலம் வாங்கப்படுகிறது. அடுத்த மூன்று அல்லது ஐந்தாண்டுகளில் இந்த அளவானது 10 ஆயிரம் கோடி டாலர் அளவை எட்டும். இணையதளம் மூலம் கொள்முதல் செய்வதால் 10,000 கோடி டாலர் வரை சுகாதாரத் துறைக்கு செலவிடும் தொகை மீதமாகும். நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும் சூழலில் இத்தகைய சேமிப்பு பிரதமர் மோடி அரசுக்கு மிகப் பெரிய சேமிப்பாகும்.இந்த ஆண்டு, ஒவ்வொரு ரூபாயாக சேமித்ததில் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ.7,500 கோடி) சேமிக்கப்பட்டுள்ளது. இப்படி சேமிக்கப்பட்ட தொகை பிற முக்கியமான

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here