திரெங்கானுவின் சொர்க்க வாசல்…

மக்கள் ஓசையின் சுற்றுலா – புதிர்ப் போட்டி

மக்கள் ஓசை தனது வாசகர்களுக்காக சுற்றுலா புதிர்ப் போட்டியை நடத்தவுள்ளது.

20.9.2020 தொடங்கி 25.10.2020 வரை போட்டி நடைபெறும். வாரத்தில் 3 நாட்கள் போட்டிக்கான கூப்பன் மக்கள் ஓசையில் பிரசுரிக்கப்படும். ஒவ்வொரு கூப்பனிலும் உள்நாட்டுச் சுற்றுலாத்துறை தொடர்பில் 2 கேள்விகள் கேட்கப்படும். கூப்பனில் வாசகர்களின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி, கைப்பேசி எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
மொத்தமாக 12 (3 நாள் ஙீ 4 வாரம்) கூப்பன்களைச் சேகரித்து 30.10.2020க்குள் மக்கள் ஓசை அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

முதல் பரிசு: லங்காவியில் உள்ள ஹோட்டலில் 4 பேர் 3 பகல் 2 இரவு தங்குவதற்கான பற்றுச்சீட்டு.

2ஆவது பரிசு: ஜோகூரில் உள்ள ஹோட்டலில் 3 பேர் 2 பகல் 1 இரவு தங்குவதற்கான பற்றுச்சீட்டு.

3ஆவது பரிசு: தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டலில் 2 பேர் 2 பகல் 1 இரவு தங்குவதற்கான பற்றுச்சீட்டு.

விதிமுறைகள்:
* மக்கள் ஓசை வாசகர்கள் அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம்.
* மக்கள் ஓசை பணியாளர்களும் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்க முடியாது.
* அசல் கூப்பன்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
* கூப்பன்களில் கூறிய விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும்.
* நீதிபதிகள் முடிவே இறுதியானது.
* சரியான பதில்களை எழுதுவோரில் வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நீலக்கடல் சூழ்ந்திருக்க, சுற்றுலாவுக்கான சொர்க்கமாக பல சுற்றுலா தளங்ககளைக் கொண்டிருக்கிறது திரெங்கானு

கிழக்குத் தொடங்கி மேற்குப் பகுதி வரை இவற்றை அதிகமாகக்காண முடிகிறது. குடும்பத்தோடு சுற்றுலா சென்று மனத்திற்கும் சிந்தனைக்கும் புத்துணர்வு தரக்கூடிய தலங்கள் இவை.

திரெங்கானு மாநிலத்திலுள்ள புலாவ் பெர்ஹெந்தியான் எனும் சுற்றுலாத் தீவு மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக அமைந்திருக்கிறது.
அங்கு செல்வோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் அங்குக் கிடைத்த அனுபவத்தையும் இயற்கைக் காட்சிகளையும் மறக்க முடியாது.

புலாவ் பெர்ஹெந்தியானில்,

1. புலாவ் பெர்ஹெந்தியான் பெசார், 2. தெலுக் கேகே, 3. லதா ஆயர் பெரானி, 4. தெரும்பு தீகா, 5. தொக்கோங் லாவுட், 6. புலாவ் தொக்கோங் புரோங், 7. தெத்தெக் பெஞ்சு (கடலாமை கரை ஒதுங்கும் பகுதி), 8. பந்தாய் ரொமான்டிக், 9. கெஞ்சிர் ஆயர் டிலகூன், 10. கம்போங் பாசீர் ஹந்து, 11. பந்தாய் பாஞ்சாங் (நீண்ட கடற்கரை), 12. தெலுக் டாலாம், 13. தெலுக் பாவ், 14. புலாவ் பெர்ஹெந்தியான் கெச்சில் ஆகிய 14 சீற்றுலாப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

புலாவ் பெர்ஹெந்தியான் கெச்சிலில் சீற்றுலாப் பயணிகளை அதிகமாகக் காண முடியும். இரவிலும் சரி, பகலிலும் சரி பல்வேறு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மன அமைதிக்காக கோரல்பே எனும் இடத்திற்கும் சுற்றுப் பயணிகள் செல்லலாம்.

தெலுக் பாவ் இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதி. நீர் டெக்சி எனும் போக்குவரத்துச் செவை மூலம் சுற்றுப் பயணிகள் அழகிய காட்சிகளைக் கண்டு களிக்கலாம். பயண நேரம் பத்து நிமிடம்தான். தெலுக் டாலாம் பகுதியில் குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்கு சிறந்ததாக அமைகிறது.

படகு செலுத்துதல், கைப்பந்து போன்ற நடவடிக்கைகள் அங்கு உள்ளன.
பந்தாய் பாஞ்சாங் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதற்கு சிறந்த இடமாகும். இரவு நேரத்தில் தீ சாகச நிகழ்ச்சிகளும் உண்டு. குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளும் உள்ளன.

கம்போங் பாசீர் ஹந்து மீனவர் கிராமமாகும். பள்ளிக்கூடமும் போலீஸ் நிலையமும் அங்கு உள்ளன. இயற்கைச் சூழல் நிறைந்த பகுதி இது. இதே போன்ற இயற்கை வளங்களும் சுற்றுலாவுக்கான சிறந்த இடங்களும் குடும்பத்தோடு விடுமுறையைக் கழிப்பதற்கு உகந்த சூழலும் கெஞ்சிர் ஆங்கின் டி லகூன், பந்தாய் ரொமான்டிக், தெத்தேக் பெஞ்சு, புலாவ் தொக்கோங் புரோங், தொக்கோங் லாவுட், தெரும்பு தீகா, லதா ஆயர் பெரானி, தெலுக் கேகே, புலாவ் பெர்ஹெந்தியான் பெசார் உள்ளிட்ட பகுதிகளில் நிறைய உள்ளன.

குறிப்பாக தெலுக் கேகே பகுதியில் வண்ண வண்ண சிறிய மீன்களைக் கடலில் காண முடியும். அங்கு வருவோர் இவற்றுக்கு ரொட்டித் துண்டுகளை உணவாகத் தரும் காட்சிகளையும் காணலாம்.

இச்சீற்றுலாப் பகுதிகளில் பொழுதைக் கழிப்போர் தங்கள் இருப்பிடத்திலிருந்து கடலோர அழகைக் கண்டுகளிக்கலாம். அறைக்குள் இருந்தபடியே கடற்காற்றின் தனித்தன்மையை உணர முடியும்.

கடல் அலைகளின் ஓசை மன அமைதிக்கு மருந்தாகவும் அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here