பிக்பாஸ் சீசன் 4 , அக்டோபர் மாதத்தில் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் பங்கேற்பாளர்கள் பட்டியல் இன்னனும் இறுதியாகவில்லை என கூறப்படுகிறது.
கொரோனா அச்சம் காரணமாக பிரபலங்கள் பலரும் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க தயக்கம் காட்டுகிறார்களாம். கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்கள் தயக்கம் காட்டுவதற்கு கொரோனா அச்சம் மட்டும் காரணம் இல்லையாம். வேறு காரணங்களையும் சொல்கிறார்கள்.
குறிப்பாக, கடந்த சீசனில் கலந்து கொண்டவர்களுக்கு சம்பள பிரச்சினை ஏற்பட்ட விவகாரம் வெளியுலகம் வரை தெரிந்தது. சீசன் 3 யில் கலந்து கொண்ட மதுமிதா, விஜய் டிவி மீது நேரடியாகவே சம்பள புகார் கூறினார். பேசியபடி சம்பளம் தரவில்லை என்று மதுமிதாவும், மதுமிதா ஒப்பந்தங்களை மீறினார் என விஜய் டிவியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அதுபோல நடிகர் சரவனணுக்கும் பேசியபடி சம்பளம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற காரணங்களால் விஜய் டிவியில் சம்பள பிரச்சினை ஏற்படும் என்கிற குழப்பம் காரணமாக சீசன் 4 ல் பங்கேற்க பிரபலங்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.
அதனால், இந்த முறை பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்கும் பிரபலங்கள் யார் என்பது இறுதி செய்யப்பட்டாமல் உள்ளது. அதே நேரத்தில் இந்த முறை 12 போட்டியாளர்களுடன், 80 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
நடிகை ரம்யா பாண்டியன், நடிகர் அனு மோகன், விஜேவும் நடிகருமான ரியோ ராஜ், நடிகை கேப்ரில்லா சார்ல்ட்டன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ,சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் ஆகியோரின் பெயர்கள் தற்போது பிக் பாஸ் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் அனுமோகன், ஜித்தன் ரமேஷ் தவிர மற்றவர்கள் விஜய் டிவியோடு தற்போது தொடர்பில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் இல்லாமல் பிக் பாஸ் சுவராஸ்யமாக இருக்காது என்பதால் ? தீவிர பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்