பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. மற்ற மூன்று சீசன்களை போலவே இதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.
இது தொடர்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அதன் டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனின் காணொளி இடம்பெற்ற விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது.
கடாரம் கொண்டான் படத்தில் நடித்த தனது மகள் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்த அபிஹசன் பிக் பாஸ் சீசன் 4இல் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அந்த தேர்வில் தான் இல்லை என்று அபி ஹஸ்ஸன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வாகும் நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பாக, கொரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிகளின்படி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.