இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா. இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார்.
இந்நிலையில் சாரா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ஐ.பி.எல். போட்டியில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர் சுப்மான்கில் பீல்டிங்கின் போது டைவ் அடித்து பந்தை பிடித்தார். இந்த புகைப்படத்தை தான் சாரா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
மேலும் அதில் அன்பை குறிக்கும் ஹார்ட் சிம்பல்களை ( இதயம் ) பதிவிட்டுள்ளார் . இதனால் இணையவாசிகள் கொளுத்திபோட்டுள்ளனர்.
இதற்கு முன்பும் 2 முறை சாராவும், சுப்மான்கில்லும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் புகைப்படத்தை சாரா வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர்கள் இருவரும் காதலில் உள்ளனர் என்பதை உறுதிபடுத்துவதாக உள்ளது என்ற கருத்து நிலவி வருகிறது. எனினும் இருதரப்பில் இருந்து எவ்வித கருத்துகளும் வெளியிடப்படவில்லை.