கடலுார் மாவட்டத்தில் முக கவசம் அணியாத 2,087 பேரிடம் ரூ. 4 லட்சத்து 13 ஆயிரத்து 100 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப் படுத்தும் பொருட்டு கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் கட்டுப்பாடுகள் இருந்த ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வோர், வாகனங்களில் செல்வோரை போலீசார் பிடித்து அவர்களுக்கு ‘ஸ்பாட் பைன்’ விதித்து வருகின்றனர். கடலுார் மாவட்டம் முழுவதும் கடந்த 20ம் தேதி முதல் நேற்று முன்தினம் (24ம் தேதி) வரை முக கவசம் அணியாமல் சென்ற 2,087 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 13 ஆயிரத்து 100 அபராதம் வசூல் செய்துள்ளனர்.