வானில் இரண்டு நிலா

பூமியை சுற்றி வரும் புதிய நிலா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மினி நிலவிற்கு 2020 SO என பெயரிடப்பட்டுள்ளது. மினி நிலவு குறித்த முழுவிவரங்களை பார்க்கலாம்.

பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த மினி நிலவு 27,000 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இந்த மினி நிலவு அக்டோபர் 2020 முதல் நவம்பர் 2021 நவம்பர்வரை பூமிக்கு அருகில் ஈர்க்கலாம் என கூறுப்படுகிறது.

இந்த மினி நிலவுக்கு 2020 SO என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலவு நவம்பர் மாதம் பூமிக்கு மிக அருகாமையில் இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த நிலவின் அளவு 20 அடியில் இருந்து 45 அடி வரை இறுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

2020 எஸ்ஓ என பெயரிடப்பட்டுள்ள இந்த மினி நிலவு ஜேபிஎல் சிறிய உடல் தரவுத்தளத்தில் அப்பல்லோ சிறுகோள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த மினி நிலவு நவம்பர் மாதம் மிக அருகில் இருக்கலாம் எனவும் டிசம்பர் மாதம் 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், பிப்ரவரி மாதம் 2 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

இருப்பினும் சிஎன்என் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல் குறித்து பார்க்கையில், இது விண்வெளி பொருளாக 1960-களில் ஏதாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு தொலைந்து போன ராக்கெட் சாதனமாக இருக்கலாம் என சிஎன்இஓஎஸ்-ன் டாக்டர் பால் சோடாஸ் கூறியிருக்கிறார்.

இது விண்வெளியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளாகவே இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மினி நிலவு 1.06 ஆண்டுகளில் பூமியை சுற்றும் ஒரு செயற்கை பொருளாகவே சிலர் கருதுகின்றனர்.

2020 SO ஒரு சிறுகோளாக இருக்கலாம் அல்லது சூரிய ஒளியின் விளைவு அடிப்படையில் காணப்படும் ஒரு செயற்கை பொருளாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சர்வேயர்-2 என்ற ராக்கெட் சந்திரனை ஆராய்வதற்கு விண்ணில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்டது என வானியலாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் ஏவப்பட்டதற்கு பிறகு விண்கலத்தின் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக இந்த பணி தோல்வியடைந்து இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது என வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கேற்ப சர்வேயர்-2 வில் இருந்து தொலைந்து போன பொருளின் அளவும் 2020 எஸ்ஓ கணக்கீட்டு அளவும் ஒத்துப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here