இங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள் கௌரவிப்பு

இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர், இங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், இரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு தோறும், நாட்டில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவப்படுத்துவது வழக்கம். இதன்படி இந்தாண்டு ராணி எலிசபெத்தின், 94வது பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் கவுரவத்திற்குரியோர் பட்டியல், வழக்கமான முறையில் வெளியிடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக, அந்த பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை மீட்க, போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோரின் பெயர்கள், இரண்டாம் எலிசபெத் ராணியின் ஒப்புதலுடன், பட்டியலில் இணைக்கப்பட உள்ளன. இந்த பட்டியல்,வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியிடப்படும் என்பதுடன், இவர்கள் அனைவரும், ராணியின் பிறந்த நாளான, அடுத்தாண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் கவுரவிக்கப்படுவர் என, பக்கிங்காம் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here