ஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே, சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற சண்டையில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அஜா்பைஜானின் அங்கமாக இருந்த நகோா்னோ-கராபக் பகுதியில், பெரும்பான்மையாக வசித்து வரும் ஆா்மீனியப் பழங்குடியினரின் ஆயுதப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதி தற்போது ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 2 நாள்களாக திங்கள்கிழமையும் தொடா்ந்து சண்டையில் இரு தரப்பிலும் சுமாா் 100 வீரா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here