நடிகையுடன் நெருக்கமா இருப்பதற்கு இது தான் காரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தற்போது தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானிசங்கருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியது.

அதிலும், அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கொடுத்திருந்த கேப்ஷன் அனைவரையும் பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கியது. ரெண்டு பெரும் காதலிக்குறீங்களா…? அப்போ ரைசா என்ன ஆனாங்க ஹாரிஷ் கல்யாண்? பிரியா பவானி சங்கருக்கும் ராஜவேல் என்கிற காதலன் இருக்கிறார். அப்படி இருக்கையில் இதென்ன திடீர் உறவு என ஆளாளுக்கு கோலிவுட்டில் கிசு கிசுக்க துவங்கினர்.

அதற்கெல்லாம் தற்ப்போது தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது, தெலுங்கில் கடந்த 2016ல் விஜய் தேவரகொண்டா – ரித்து வர்மா இணைத்து நடித்திருந்த பெல்லி சுப்புலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹாரிஷ் – பிரியா பவானி ஷங்கர் இணைத்து நடிக்கின்றனர். அதற்கு தான் இப்படி ஒரு ப்ரோமோஷன் கொடுத்து எல்லோரையும் அலறவிட்டுட்டார். நல்லா பண்றப்பா ப்ரோமோஷன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here