10 லட்ச வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

கம்போங் பாரு சாலாக் செளத்தான் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புரோடுவா கெம்பாரா காரில் பயணித்த ஒரு இந்திய ஆடவர் மற்றும் ஒரு மலாய் ஆடவரை நிறுத்தி அக்காரை சோதனை செய்ததில் 10 லட்ச வெள்ளி பெறுமானமுள்ள போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 19,068 கிராம் எடையுள்ள 43 பாக்கெட்டுகளில் கெத்தமின் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய ஆடவருக்கு 18 வயது எனவும் மலாய் ஆடவருக்கு 28 வயது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் 40,000 பேர் வரை உபயோகப்படுத்த முடியும் என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது மோக்சின் பின் முகமது சோன் தெரிவித்தார்.

மேலும் இருவரும் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்திய ஆடவருக்கு ஏற்கெனவே 1 குற்றப்பதிவு இருப்பதாகவும் மலாய் ஆடவருக்கு 7க்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் செக்‌ஷன் 117 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இருவரும் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

படங்கள்: எல்.கே.ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here